TNPSC Thervupettagam

சிங்காரச் சென்னை 2.0

August 29 , 2021 1244 days 2009 0
  • தமிழக முதல்வர் சிங்காரச் சென்னைத் திட்டத்தைப் புதுப்பித்து இருக்கிறார்.
  • 1996 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு சென்னையின் மேயராக இருந்த மு.க. ஸ்டாலின் சென்னை நகரைக் குப்பையற்ற ஒரு நகரமாக மாற்றவும் மேம்பாலங்கள் உள்ளிட்ட சாலை உள்கட்டமைப்பு வசதிகளோடு தரம் உயர்த்தவும் வேண்டி சிங்காரச் சென்னைஎன்ற ஒரு தலைமைத் திட்டத்தின் கீழ் பல திட்டங்களை வகுத்தார்.
  • இத்திட்டத்தின் 2வது பதிப்பானது தூய்மையான மற்றும் பசுமையான நகரமாக்கல் திட்டத்தினைத் தொடரச் செய்வதோடு நகரின் கடற்கரை, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை நல்ல முறையில் பயன்படுத்தவும் ஈடுபாடு செலுத்துவதை நோக்கமாகக்  கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தில் குப்பைகள் மற்றும் சுவரொட்டிகள் இல்லாத சென்னை என்ற திட்டமும் அடங்கும்.
  • மேலும்இது ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் குழாய் இணைப்பு மற்றும் கழிவுநீர் குழாய் இணைப்பு மற்றும் தரமான கழிவறைகளைப் பயன்படுத்துதல் போன்ற வசதிகளையும் உள்ளடக்கும்.
  • சென்னை தினம்மற்றும்சென்னை சங்கமம்உள்ளிட்டக் கலாச்சார நிகழ்வுகளும் இதில் ஊக்குவிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்