தமிழகத்தில் ஒரு சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தினை நிறுவுவதற்கான மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதன் வேந்தராக செயல்படுவார்.
பல்கலைக் கழகத்தின் வேந்தர் என்ற முறையில், தேடல் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெயர்களின் பட்டியலில் இருந்து அதன் துணைவேந்தரை முதல்வர் அவர்கள் நியமிப்பார்.
2022 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டத்தின்படி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அதன் இணைநிலை வேந்தராக செயல்படுவார்.