சிபிஐ அமைப்பிற்கான மாநில அரசின் ஒப்புதல் குறித்து உச்ச நீதிமன்றம்
January 6 , 2025 9 days 76 0
சம்பந்தப்பட்ட மாநில எல்லைக்குள் பணி புரியும் மத்திய அரசு ஊழியர் மீது மத்திய அரசு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பிறவற்றை உள்ளடக்கியது.
மத்தியப் புலனாய்வுத் துறையின் ஆய்வுக்கு விசாரணைக்கு பொது மற்றும் குறிப்பிட்ட வழக்கு சார்ந்த விசாரணை ஒப்புதல் என இரண்டு வகையான ஒப்புதல்கள் உள்ளன.
ஒரு வழக்கை விசாரிப்பதற்காக ஒரு மாநில அரசு மத்தியப் புலனாய்வுத் துறைக்குப் பொது விசாரணை ஒப்புதலை (1946 ஆம் ஆண்டு டெல்லி சிறப்புக் காவல் துறை ஸ்தாபனச் சட்டத்தின் 6வது பிரிவு) வழங்கும் போது, விசாரணை தொடர்பாக அல்லது ஒவ்வொரு வழக்கிற்கும் அந்த மாநிலத்திற்குள் நுழையும் ஒவ்வொரு முறையும் அந்தத் துறையானது புதிதாக அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.
அவ்வாறு அனுமதி வழங்கப் படவில்லையெனில், சம்பந்தப்பட்ட அம்மாநில அரசிடம் இருந்து விசாரணைக்காக வழக்கு வாரியாக மத்தியப் புலனாய்வுத் துறை ஒப்புதல் பெற வேண்டும்.
குறிப்பிட்ட விசாரணை சார்ந்த ஒப்புதல் வழங்கப்படாவிட்டால், மத்தியப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு அந்த மாநிலத்திற்குள் அவர்கள் நுழையும் போது காவல்துறை அதிகாரிகளுக்கு இணையான அதிகாரம் வழங்கப்படாது.