ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பெண் ஊழியர்களுக்காக 706 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழில்துறைக் குடியிருப்பு வளாகத்தைத் தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்தக் குடியிருப்பு வளாகம் இந்தியாவில் பணியாளர்களுக்கான இந்த மாதிரியான வகையில் தற்போது மிகவும் பெரியதாகும்.
இந்த மாநிலத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் 41000 நபர்களைப் பணியில் அமர்த்தி உள்ள நிலையில் அதில் 35000 நபர்கள் பெண் பணியாளர்கள் ஆவர்.
தற்போது சீனாவிற்கு வெளியே அதிகமான பணியாளர்களை ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் கொண்டுள்ள நிலையில் அதில் அதிகமான அளவில் பணியாளர்களைத் தமிழ்நாட்டில் கொண்டுள்ளது.
சிப்காட்- SIPCOT (தமிழ்நாடு மாநிலத் தொழில் துறை மேம்பாட்டுக் கழகம்) விரைவில் அதன் தொழிற்பேட்டைகளில் குழந்தைகள் காப்பகங்களை அமைக்க உள்ளது.
இந்தியாவிலேயே 42 சதவிகிதம் என்ற அளவில் மிக அதிகமாக பெண் தொழிற்சாலைப் பணியாளர்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும்.