December 21 , 2020
1440 days
657
- இது பிஎஸ்எல்வி-சி50 என்ற விண்வெளிக் கலத்தின் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தினால் ஏவப்பட்ட ஒரு தகவல் தொடர்பு செயற்கைக் கோளாகும்.
- இது அதிர்வெண் அலைக் கற்றையின் நீட்டிக்கப்பட்ட சி பட்டையில் சேவைகளை வழங்குவதற்காக செலுத்தப்பட்ட 42வது தகவல் தொடர்புச் செயற்கைக் கோளாகும்.
- இது இந்திய மைய நிலப்பகுதி, அந்தமான் நிக்கோபார் மற்றும் இலட்சத் தீவுகள் ஆகியவற்றிற்குச் சேவை அளிக்கும் திறன் கொண்டது.
- இது புவி ஒத்திசைவு மற்றும் சுற்றுவட்டப் பாதையில் சிஎம்எஸ்-01 என்ற செயற்கைக் கோளைச் செலுத்த உள்ளது.
- இந்தச் செயற்கைக் கோளின் செயல்படும் காலமானது 7 ஆண்டுகளாகும்.
- இது பிஎஸ்எல்வி விண்வெளிக் கலம் மற்றும் இஸ்ரோவின் 52வது விண்கலம் ஆகும்.
- சிஎம்எஸ்-01 செயற்கைக் கோள் ஏவுதலானது உள்நாட்டிலேயே செலுத்தப்பட்ட 77வது பயணமாகும்.
- இது ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்துச் செலுத்தப்பட்டது.
Post Views:
657