சியர்ர லியோனின் புதிய ஜனாதிபதியாக ஜீரியஸ் மாடா பியோ, தலைநகர் ஃபிரீ டவுனில் பதவியேற்றுக் கொண்டார்.
சியர்ர லியோனின் முன்னாள் ஆட்சிக்குழுத் தலைவரான திரு.பியோ சியர்ர லியோனை 1996 ஆண்டில் ஒரு குறுகிய காலத்திற்கு ஆண்டார்.
சியர்ர லியோன் மக்கள் கட்சியைச் சேர்ந்த திரு. மாட பியோ தற்போது ஆட்சியிலுள்ள அனைத்து மக்கள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான சமுரா கமராவை (பொருளாதார வல்லுநர்) வென்றார்.
தற்போதைய ஜனாதிபதியான எர்னெஸ்ட் பாய் கொரோமா இரண்டு ஐந்து ஆண்டுகள் என்ற காலத்திற்குப் பிறகு பதவி விலகினார். இவருடைய பத்து ஆண்டுகள் ஜனாதிபதி காலகட்டத்தில் முதல் முறையாக எதிர்க்கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. சியர்ர லியோனில் உள்நாட்டுப் போர் 2002 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பிறகான நான்காவது தேர்தல் இதுவாகும்.
அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள சியர்ர லியோன் நாடானது, ஃபிரீ டவுண் தீபகற்பத்தின் உட்பகுதியில் காணப்படும் வெண்மைநிற மணற் கடற்கரைகளுக்குப் பெயர் பெற்றது.