இந்திய ரிசர்வ் வங்கி ஒரு நிலையான வெளிப்புற ஆலோசனைக் குழுவினை அமைத்துள்ளது.
இக்குழு பொது மற்றும் சிறிய நிதி வங்கிகளின் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும்.
5 உறுப்பினர்களைக் கொண்ட இக்குழு, RBI வங்கியின் முன்னாள் துணை ஆளுநரான சியாமளா கோபிநாத்தைத் தலைவராகக் கொண்டுள்ளது.
இக்குழுவின் பதவிக் காலம் 3 வருடங்களாகும்.
இந்த வழிகாட்டுதல்களின் படி, விண்ணப்பதாரர்களின் முதல்நிலைத் தகுதியை உறுதிப்படுத்த பொது மற்றும் சிறிய நிதி வங்கிகளின் விண்ணப்பங்களை முதலில் RBI மதிப்பீடு செய்யும்.
அதன் பிறகு புதிதாக அமைக்கப்பட்ட குழு அவ்விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும்.