பிரதமர் நரேந்திர மோடி தென் கொரியாவில் சியோல் அமைதிப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
சியோல் அமைதிப் பரிசைப் பெறும் ஒரே இந்தியர் மோடி மட்டுமே ஆவார்.
இவ்விருது உலகப் பொருளாதார வளர்ச்சிக்காகவும் சர்வதேச ஒத்துழைப்பிற்காகவும் அவர் அளித்த பங்களிப்பிற்காக அவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
200000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகை கொண்ட இவ்விருதை பெறும் 14-வது நபர் இவராவார். இவர் அப்பரிசுப் பணத்தை நமாமி கங்கைத் திட்டத்திற்கு அளித்து விட்டார்.
சியோல் அமைதிப் பரிசு
1990 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட சியோல் அமைதிப் பரிசு கொரியத் தீபகற்பத்திலும் மிஞ்சியுள்ள உலகத்திலும் அமைதிக்காக ஏங்கும் கொரிய மக்களின் ஆசைக்கு வடிவம் கொடுப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகும்.
இது கொரியக் குடியரசின் சியோல் நகரத்தில் நடைபெற்ற 24-வது ஒலிம்பிக் போட்டிகளின் வெற்றியை அனுசரிப்பதற்காக ஆரம்பத்தில் ஏற்படுத்தப்பட்டது.