குஜராத்தில் உள்ள தாஹோட் மற்றும் பஞ்சமஹால்ஸ் மாவட்டங்களில் ஒரு புதிய வகையினைச் சேர்ந்த புறத்தோலற்ற - கால் கொண்ட பல்லி (சிர்டோபோடியன்) இனம் என்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இது விந்திய மலையின் பெயரால் ‘சிர்டோபோடியன் விந்தியா’ எனப் பெயரிடப் பட்டது.
இது கடந்தப் பதினைந்து ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் கண்டறியப்பட்ட ஐந்தாவது ஊர்வன இனமாகும்.
இந்த கெக்கோனிட் வகை பல்லிகள் வட ஆப்பிரிக்கா, அரேபியா மற்றும் மத்திய ஆசியாவின் வறண்டப் பகுதிகள் முதல் வடமேற்கு இந்தியா வரை பரவிக் காணப் படுகின்றன.
பல்லியினக் குடும்பத்தைச் சேர்ந்த சைர்டோபோடியன் பேரினத்தில் 23 அறியப்பட்ட பல்லி இனங்கள் உள்ளன.