TNPSC Thervupettagam

சிறந்த ஆளுமை கொண்ட மாநிலம்

October 21 , 2022 639 days 362 0
  • 7வது பொது விவகாரக் குறியீடானது (2022), பெங்களூருவைச் சேர்ந்த இலாப நோக்கற்ற சிந்தனைக் குழுவான பொது விவகார மைய அமைப்பினால் தயாரிக்கப் பட்டது.
  • இந்தியாவில் உள்ள 18 பெரிய மாநிலங்களில் சிறந்த ஆளுமை கொண்ட மாநிலமாக ஹரியானா உருவெடுத்துள்ளது.
  • இந்தியாவிலேயே சிறிய மாநிலங்களில் சிறந்த ஆளுமை கொண்ட மாநிலமாக சிக்கிம் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது
  • சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதி போன்ற கருத்துருக்களில் ஹரியானா முன்னணியில் உள்ளது.
  • மேலும் தமிழ்நாடு, கேரளா, சத்தீஸ்கர், பஞ்சாப் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களின் மத்தியில் ஹரியானா முதலிடத்தில் உள்ளது.
  • தொழிலாளர் உற்பத்தித் திறன், கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்தல், மேம்பாட்டிற்கான பொதுச் செலவினங்கள், சமூகப் பாதுகாப்பு வலையமைப்பின் பரவல் மற்றும் வேலை வாய்ப்புகள் போன்ற குறிகாட்டிகளில் பொருளாதார நீதி மதிப்பிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்