உத்திரப்பிரதேசத்தின் பாதோஹி மாவட்டத்திற்கு கம்பளம் மற்றும் இதர தரை விரிப்பான் பொருட்கள் பிரிவில் ‘சிறந்த ஏற்றுமதி’ குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகுதி நிலையானது வர்த்தக அமைச்சகத்தின் கீழ் உள்ள வெளிநாட்டு வர்த்தகத்தின் பொது இயக்குநரகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த “சிறந்த ஏற்றுமதி நகரங்கள்” குறியீட்டின் கீழ் இந்நகரத்தின் கம்பள தயாரிப்பாளர்கள் மத்திய அரசிடமிருந்து நிதியுதவியினைப் பெறுவர்.
இந்த உதவியானது நவீன இயந்திரங்களை வாங்கவும், ஏற்றுமதி கட்டமைப்பை மேம்படுத்தவும், கண்காட்சிகளை ஏற்பாடு செய்யவும் உலகின் பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தவும் பயன்படும்.
உத்திரப்பிரதேசத்தின் பாதோஹி மாவட்டமானது கையால் நெய்யப்பட்ட கம்பளங்களுக்கு உலகமெங்கிலும் பிரபலமானதாகும்.
கங்கை ஆற்றின் அருகில் அமைந்துள்ள இந்த பாதோஹி நகரமானது இந்த குறியீட்டைப் பெற்ற 37-வது நகரமாகும்.