TNPSC Thervupettagam

சிறந்த சமூகத் தாக்கத்திற்கான விருது

April 21 , 2023 457 days 248 0
  • வாரணாசியில் அமைந்துள்ள பெக்கர்ஸ் கார்ப்பரேஷன் எனும் புத்தொழில் நிறுவனமானது, இன்னோபிரீனர்ஸ் உலகப் புத்தொழில் நிறுவனங்கள் போட்டியில் சிறந்த சமூகத் தாக்கத்திற்கான விருதினைப் பெற்றது.
  • இந்தியாவில் நிலவும் இரவல் நிலை (பிச்சைத் தொழில்) சார்ந்த பிரச்சனையைத் தீர்க்கச் செய்வதற்கான அதன் புதுமை மிக்க வழிக்காக வேண்டி இந்தப் புத்தொழில் நிறுவனத்திற்கு இந்த அங்கீகாரமானது வழங்கப்பட்டுள்ளது.
  • பெகர்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனமானது, இந்த நன்கொடைப் பணத்தைப் பயன்படுத்தி, இரவல் தொழில் செய்யும் நபர்களை வேலைவாய்ப்பினை உருவாக்கச் செய்பவர்களாக மாற்றி, அவர்களின் பல்வேறு செயல்திறன்களைப் புத்தொழில் நிறுவனங்களுக்காக உதவும் வகையில் மேம்படுத்த உள்ளது.
  • அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 85,000 பிச்சைக்காரர்கள் உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 65,835 பிச்சைக்காரர்கள் உள்ளனர்.
  • பல்வேறு தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள 413,670 பிச்சைக்காரர்களுக்கு இந்தியர்கள் ஆண்டுதோறும் 34,242 கோடி ரூபாயினை நன்கொடையாக வழங்குகிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்