TNPSC Thervupettagam

சிறந்த சுற்றுலா விருதுகள் – ஆந்திரா

September 28 , 2019 1760 days 844 0
  • இந்தியத் துணைக் குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடுவால் வழங்கப்பட்ட 2017-18 ஆம் ஆண்டிற்கான தேசிய சுற்றுலா விருதுகளில் ஆந்திரா மாநிலம் சிறந்த இடத்தை (முதல் இடம்) பிடித்துள்ளது.
  • இது சுற்றுலாப் பிரிவில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான சிறந்த மாநில விருதைப் பெற்றுள்ளது.
  • சாகச சுற்றுலாப் பிரிவில் கோவா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இணைந்து வெற்றி பெற்றுள்ளன.
  • சிறந்த திரைப்பட ஊக்குவிப்பிற்கு உகந்த மாநிலத்திற்கான விருதை உத்தரகாண்ட் மாநிலம் வென்றுள்ளது.
  • தகவல் தொழில்நுட்பத் துறையின் புதுமையான பயன்பாட்டிற்காக சிறந்த மாநிலத்திற்கான விருதை தெலுங்கானா மாநிலம் வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்