TNPSC Thervupettagam

சிறந்த செயல்திறன் கொண்ட மாநகராட்சிக் கழகம்

August 17 , 2023 338 days 229 0
  • திருச்சி மாநகராட்சியானது, இந்த ஆண்டிற்கான சிறந்த செயல்திறன் கொண்ட மாநகராட்சிக்கான முதலமைச்சரின் விருதைப் பெற்றுள்ளது.
  • இதில் தாம்பரம் மாநகராட்சியானது இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளது.
  • சிறந்தச் செயல்திறன் கொண்ட நகராட்சியாக இராமேஸ்வரம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
  • திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்ட நகராட்சிகளாக முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளன.
  • விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி, புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆலங்குடி, சேலம் மாவட்டத்தின் வீரக்கல்புதூர் ஆகிய நகரப் பஞ்சாயத்துகள் (ஊராட்சிகள்) முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்