TNPSC Thervupettagam

சிறந்த தேர்தல் நடைமுறைகளுக்கான விருது 2023

February 2 , 2024 169 days 240 0
  • தேர்தல் ஆணையத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான 'சிறந்த தேர்தல் நடைமுறைகள் விருதுகள்' மொத்தம் 16 தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
  • சத்தீஸ்கர் மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி ரீனா பாபாசாகேப் கங்கலே, கடந்த ஆண்டு அந்த மாநிலத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தலை நடத்தியதற்காக 'சிறந்த செயல்திறன் கொண்ட மாநில விருதை' வென்றுள்ளார்.
  • பெங்களூருவின் ரேடியோ மிர்ச்சி, கடந்த ஆண்டு கர்நாடகா தேர்தலின் போது மேற்கொண்ட வாக்காளர் விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்காக ஊடகப் பிரிவில் விருது பெற்றுள்ளது.
  • நக்சலிசத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் அதிக வாக்குகள் பதிவாகியதற்காக தண்டேவாடா ஆட்சியர் வினித் நந்தன்வாருக்கு விருது வழங்கப்பட்டது.
  • கடந்த ஆண்டு மாநிலத் தேர்தல் எந்தவித தேர்தல் வன்முறையும் இன்றி நடைபெறச் செய்வதை உறுதி செய்ததற்காக திரிபுராவின் தலாய் மாவட்டத்தின் காவல் துறை ஆய்வாளர் ரமேஷ் சந்த்திற்கு விருது வழங்கப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டு கர்நாடகத் தேர்தலில் முறையான வாக்காளர் பட்டியல் நிர்வாகத்திற்கான விருது சித்ரதுர்கா மாவட்ட தேர்தல் அதிகாரி திவ்ய பிரபுவுக்கு வழங்கப் பட்டது.
  • ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்ட ஆட்சியர் அன்ஷ் தீப் தனது 'தேர்தல் நண்பர்' (எலெக்சன் படி) என்ற செயலிக்காக தகவல் தொழில்நுட்ப முன்னெடுப்புகள் பிரிவில் விருது பெற்றுள்ளார்.
  • தேர்தலில் மக்களின் பங்கேற்பை மேம்படுத்தியதற்காக நாக்பூர் மாவட்டத் தேர்தல் அதிகாரி விபின் இடங்கருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
  • தேர்தல் பாதுகாப்பு மேலாண்மைக்காக மிசோரம் மாநிலத்தின் சம்பையின் மாவட்ட காவல்துறை துணை ஆய்வாளர் வினீத் குமார் மற்றும் திரிபுரா மாநிலத்தின் தலாய் மாவட்ட காவல்துறை ஆய்வாளர் ரமேஷ் சந்த் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டு உள்ளது.
  • தேர்தல் மேலாண்மைக்கான (செலவினம்) விருதை கர்நாடகாவின் வணிக வரித்துறை ஆணையர் ஷிகா.C வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்