பிரமல் குழுமத்தின் துணைத் தலைவர் ஸ்வாதி பிரமலுக்கு செவாலியர் டி லா லெஜியன் டி'ஹானூர் (நைட் ஆஃப் தி லெஜியன் ஆஃப் ஹானர்-மாவீரர்) பட்டமானது வழங்கப்பட்டது.
தேசியம் மற்றும் சர்வதேச அளவில் வணிகம் மற்றும் தொழில், அறிவியல், மருத்துவம், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் பிரமல் குழுமம் ஆற்றியச் சிறந்தச் சாதனைகள் மற்றும் பங்களிப்பிற்கான அங்கீகாரமாக இந்த விருதானது வழங்கப் பட்டது.
2006 ஆம் ஆண்டில், பிரான்சின் இரண்டாவது மிக உயரிய குடிமகன் கௌரவ விருதான செவாலியர் டி எல்'ஆர்ட்ரே நேஷனல் டு மெரிட் (நைட் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மெரிட்) விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.