TNPSC Thervupettagam
July 18 , 2020 1595 days 657 0
  • சமீபத்தில் துகள் உலோகம் மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி மையமானது குறைந்த செலவு கொண்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறந்த மின்தேக்கி மின்முனையை மேம்படுத்தியுள்ளது.
  • இது ஆற்றலைப் பெற்று சேமித்து வைக்கும் ஒரு சாதனமாகப் பயன்படுத்தப்பட இருக்கின்றது.
  • இது தொழிற்சாலைக் கழிவுப் பருத்தியிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
  • ஆராய்ச்சியாளர்கள் தொழிற்சாலைக் கழிவுப் பருத்தியை நுண்ணியக் கரிம இழைகளாக மாற்றியுள்ளனர்.
  • இந்த இழைகள் மின்முனைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
  • இயற்கைக் கடல் நீரானது மாற்று நீர் கலந்த மின்பகுபொருளாகப் பயன்படுத்தப் படுகின்றது.
  • சூப்பர் மின் தேக்கிகள் என்பது அடுத்த தலைமுறைக்கான ஆற்றல் சேமிப்புச் சாதனங்கள் ஆகும்.
  • இவை மற்ற வழக்கமான மின்தேக்கிகள் மற்றும் லித்தியம் – அயனி மின்கலன்களுடன் ஒப்பிடப்படும்போது உயர் மின் அடர்த்தி அதிவேக மின்னேற்றம் மற்றும் நீடித்தத் தன்மை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • மின்பகுபொருள், மின்முனை, பிரிப்பான் மற்றும் மின் சேகரிப்பான் ஆகியவை சூப்பர் மின்தேக்கிகளின் 4 முக்கியப் பொருட்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்