TNPSC Thervupettagam

சிறப்பு ஆயுதங்கள் மற்றும் செயல்தந்திர முறைகளுக்கான குழு (SWAT)

August 15 , 2018 2169 days 619 0
  • இந்தியாவிலேயே இதுவரையில் எந்தவொரு காவல்துறையிலும் இல்லாததாக, முதன்முறையாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக 36 கமாண்டோக்களை உள்ளடக்கிய அனைத்து பெண் சிறப்பு ஆயுதங்கள் மற்றும் செயல்தந்திர முறைகளுக்கான (SWAT- Special Weapons And Tactics) குழுவை டெல்லி காவல்துறை உருவாக்கியுள்ளது.
  • புதிய அணியில் உள்ள 36 பெண் கமாண்டோக்கள் அனைவரும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர்.
  • இந்த பெண் கமாண்டோக்கள் ஆகஸ்ட் 15, 2018 சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது செங்கோட்டையிலும், இந்தியா வாயில் பகுதியிலும் பணி அமர்த்தப்படுவர்.
  • இந்த சிறப்பு ஆயுதங்கள் மற்றும் செயல்தந்திர முறைகளுக்கான குழு டெல்லி காவல்துறை ஆணையரான அமுல்யா பட்நாயக்கின் சிந்தனையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்