பாகிஸ்தானை மத சுதந்திரத்தின் “கடுமையான மீறலுக்கான“ (Severe Violation) ‘சிறப்பு கண்காணிப்பு பட்டியலில்’ (Special Watch list) அமெரிக்கா சேர்த்துள்ளதன் மூலம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இப்பட்டியலின் கீழ் சேர்க்கப்பட்ட ஒரே நாடாக பாகிஸ்தான் உருவாகியுள்ளது.
மேலும் அமெரிக்கா தன்னுடைய சர்வதேச மதச் சுதந்திரச் சட்டத்தின் கீழ் “குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தப்பட வேண்டிய நாடுகளின்“ பட்டியலில் (countries of particular concern) 10 நாடுகளை மீண்டும் பட்டியலிட்டுள்ளது (Re-designate).
அப்பத்து நாடுகளாவன: மியான்மர், சீனா, எரித்திரியா, ஈரான், வடகொரியா, சூடான், சவூதி அரேபியா, தஜிகிஸ்தான், டர்க்மேனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான்.
மதச் சுதந்திரத்தின் மீறலில் ஈடுபடும் அல்லது மதச் சுதந்திரத்தின் மீறலை சகித்துக் கொள்ளக் கூடிய, இருப்பினும் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் (Countries of Particular Concern) இடம் பெறும் அளவுக்கு மோசமடையாத நாடுகள் சிறப்பு கண்காணிப்பு பட்டியலில் (Special Watch List) பட்டியலிடப்படும்.
இப்புது வகைப்பாட்டு பிரிவு அமெரிக்காவின் 2016-ன் சர்வதேச மதச் சுதந்திர சட்டத்தின் கீழ் (International Religious Freedom Act) உருவாக்கப்பட்டது.
குறிப்பிட்ட நாடுகளில் மதச் சுதந்திரத்திற்கான மரியாதையை அதிகரிப்பதற்காக சிறப்பு கண்காணிப்பு பட்டியலில் அந்நாடுகள் பட்டியலிடப்படுகின்றன.