TNPSC Thervupettagam

சிறப்பு நீண்டகால ரெப்போ நடவடிக்கை

May 12 , 2021 1295 days 611 0
  • சிறு நிதியியல் வங்கிகளுக்கான 10000 கோடி ரூபாய் மதிப்பிலான தனது முதல் சிறப்பு (Special Long Term Repo Operation – SLTRO) நீண்டகால  ரெப்போ நடவடிக்கையை மேற்கொள்ள உள்தாக இந்திய ரிசர்வ் (RBI) வங்கி சமீபத்தில் அறிவித்தது.
  • 2021 ஆம் ஆண்டு மே முதல் ஒவ்வொரு மாதமும் SLTRO (Special Long Term Repo Operation) நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என RBI அறிவித்துள்ளது.
  • SLTRO நடவடிக்கையானது 3 வருடங்களுக்குச் செல்லுபடியாகும்.
  • அனைத்து சிறு நிதியியல் வங்கிகளும் SLTRO நடவடிக்கையில் பங்கேற்கலாம்.
  • இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்துப் பெறப்படும் தொகையானது முறை சாரா துறைகள் மற்றும் சிறு வணிக அலகுகள் போன்ற குறிப்பிட்ட பிரிவுகளுக்கு மட்டுமே கடனாக வழங்கப்படும் என்பதை அந்த வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது நாட்டின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுள் ஒன்றாக இதனைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்