நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டலக் கொள்கையை (Special Economic Zone -SEZ) ஆய்வு செய்திட பாரத் போர்ஜின் பாபா கல்யாணியை தலைமையாகக் கொண்டு சிறந்த நிபுணர்களை உள்ளடக்கிய குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.
இக்குழு உலக வர்த்தக நிறுவனத்தின் விதிமுறைகளோடு ஒத்துப் போகும் வகையிலும், ஏற்றுமதியாளர்களுக்குப் பயன்படும் வகையிலும் பயனுடைய நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும்.
சிறப்பு பொருளாதார மண்டல விதிகளை உள்ளடக்கிய 2005-ம் ஆண்டின் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் (SEZ Act) 2006-ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி நடைமுறைக்கு வந்தது.
நாடு முழுவதும் 223 இயங்கக்கூடிய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இம்மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு உள்ள மொத்த முதலீடு இதுவரையில் 18,876 கோடிகளாகும்.