TNPSC Thervupettagam

சிறப்பு வாக்களிப்பு உரிமைகள்

April 19 , 2021 1318 days 708 0
  • சமீபத்தில் G20 குழுவின் நிதி அமைச்சர்கள், அதன் உறுப்பினர் நாடுகளுக்குப் புதிதாக  சிறப்பு வாக்களிப்பு உரிமைகளை அளித்திட சர்வதேச நாணய நிதியத்திற்கு ஒப்புதல் அளித்து உள்ளது.
  • சர்வதேச நாணய நிதியம் அதன் உறுப்பினர் நாடுகளுக்கு 650 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற மதிப்பிலான சிறப்பு வாக்களிப்பு உரிமைகளை அளித்திட அனுமதிக்கப் பட்டு உள்ளது.

சிறப்பு வாக்களிப்பு உரிமைகள்

  • இது ஒரு சர்வதேச கையிருப்புச் சொத்து ஆகும்.
  • இது 1969 ஆம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியத்தால் அதன் உறுப்பினர் நாடுகளின் அலுவல்பூர்வ கையிருப்புகளுக்குப் பதிலீடு செய்வதற்காக உருவாக்கப்பட்டது.
  • இந்தச் சிறப்பு வாக்களிப்பு உரிமைகளின் மதிப்பானது உலகின் 5 நாணயங்களின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
  • அவை அமெரிக்க டாலர், ஜப்பானிய யென், சீனாவின் ரென்மின்பி, பிரிட்டிஷாரின் பவுண்ட் ஸ்டெர்லிங் மற்றும் யூரோ ஆகியனவாகும்.
  • இந்தச் சிறப்பு வாக்களிப்பு உரிமைகளின் மதிப்பு தினந்தோறும் கணக்கிடப் படுகின்றது.
  • சர்வதேச நாணய நிதியத்தில் ஓர்  உறுப்பு நாட்டின் வாக்களிக்கும் சக்தியானது சிறப்பு வாக்களிப்பு உரிமைகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அமைந்திருக்கின்றது.
  • இது ஒரு நாட்டின் பொருளாதார நிலைமையின் அடிப்படையில் முதன்மையாக இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்