சிறப்பு NCD நோய்க் கண்டறிதலூக்கான தீவிரப்படுத்தப்பட்ட பிரச்சாரம்
February 24 , 2025 3 days 30 0
மத்திய அரசானது, சிறப்பு NCD நோய்க் கண்டறிதலுக்கான ஒரு தீவிரப்படுத்தப்பட்டப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தப் பிரச்சாரம் ஆனது, ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் (AAMs) மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சுகாதார மையங்களில் செயல்படுத்தப்படும்.
இந்த இலட்சிய நோக்க மிக்க முன்னெடுப்பானது, 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து நபர்களிலும் NCD நோய்கள் உள்ளதா என்பதைக் கண்டறியச் செய்வதற்காக முழு பரிசோதனை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாய், மார்பகம் மற்றும் கர்ப்பப் பை வாய் ஆகிய மூன்று பொதுவான புற்றுநோய்களும் அடங்கும்.