TNPSC Thervupettagam

சிறிய பனியுகப் பருவநிலை பற்றிய வழக்கமான கருத்துக்கள்

October 29 , 2023 264 days 264 0
  • பொது ஆண்டு 1671-1942 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட உலகளாவிய பருவநிலை நிகழ்வான சிறியப் பனி யுகம் (LIA) பற்றிய ஒரு புதிய ஆய்வானது, இந்த யுகமானது ஈரநிலையோடு இருந்ததாகவும், எல்லா இடத்திலும் ஒரே சீரான குளிர் மற்றும் வறண்ட நிலையில் காணப்படவில்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.
  • இந்த காலகட்டத்தில் பருவமழை குறைந்ததையடுத்து ஒரே சீரான குளிர் மற்றும் வறண்டப் பருவநிலை அப்போது திகழ்ந்தது என்ற வழக்கமான நம்பிக்கைகளுக்கு இது சவால் விடுக்கிறது.
  • மேற்குத் தொடர்ச்சி மலைகளானது கோடைகாலத் தென்மேற்குப் பருவமழை (SWM) மற்றும் குளிர்கால வடகிழக்குப் பருவமழை (NEM) ஆகிய இரண்டையும் பெறுகிறது.
  • கடந்த ஆயிரம் ஆண்டு காலத்திலிருந்தப் பருவமழையில் பதிவான பல்வேறு ஏற்ற இறக்கங்களைப் புரிந்து கொள்வதற்கு SWM மற்றும் NEM ஆகிய இரண்டின் தாக்கங்கள் பெற்ற பகுதிகளில் உள்ள தாவரங்களின் மாறுநிலை இயக்கங்கள் மற்றும் அது தொடர்பான நீரியல் பருவ நிலை மாறுபாடுகளை ஆராய்வது மிக இன்றியமையாதது ஆகும்.
  • பொது ஆண்டு 1219 முதல் 1942 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மகரந்தம் சார்ந்தத் தாவரங்களின் மாறுநிலை இயக்கங்கள் மற்றும் சமகால பருவ நிலை மாற்றம் பருவமழை மாறுபாடு பற்றிய ஒரு ஆய்வானது மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து பெறப்பட்டுள்ளது.
  • மேற்குத் தொடர்ச்சி மலைகளில், NEM தாக்கத்தின் அதிகரித்ததன் காரணமாக சிறு உறை பனிக்காலத்தின் (LIA) போது ஈரமான நிலைகள் இருந்ததை இந்த ஆய்வானது எடுத்துரைக்கிறது.
  • இந்த ஈரமான சிறு உறைபனிக்காலமானது அந்தக் காலத்துடன் தொடர்புடைய எதிர் பார்க்கப் பட்ட வறண்டப் பருவநிலைக்கு முரணாக உள்ளது.
  • வெப்ப மண்டலத்திடை  காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (ITCZ) வடக்கு நோக்கி நகர்தல், நேர்மறையான வெப்பநிலை முரண்பாடுகள், அதிகரித்தச் சூரிய செறிவுப் பகுதிகள் மற்றும் அதிக சூரிய செயல்பாடு ஆகியவை பருவநிலை மாற்றம் மற்றும் SWM தாக்கம் ஆகியவற்றை அதிகரித்திருக்கலாம்.
  • வடக்கு அரைக்கோளத்தில் குளிர் சூழல் நிலவும்போது, ​​பூமத்திய ரேகைப் பகுதிகள் முழுவதும் வடக்கு நோக்கிய ஆற்றல் பாய்ச்சலின் விளைவாக வெப்ப மண்டலத்திடை  காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தெற்கு நோக்கி நகர்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்