TNPSC Thervupettagam

சிறிய வாயுக் கீற்றுகள்

September 1 , 2023 323 days 233 0
  • ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் / அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் சூரியனைச் சுற்றி வரும் ஒரு விண்கலமானது சூரியனின் வெளிப்புற மண்டலத்தில் இருந்து வெளியேறும் பல சிறிய வாயுக் கீற்றுக்களை கண்டறிந்துள்ளது.
  • ஒவ்வொரு வாயுக் கீற்றுக்களும் 20 முதல் 100 வினாடிகள் வரை நீடிக்கக் கூடியவை என்பதோடு அவை வினாடிக்கு சுமார் 100 கி.மீ. என்ற வேகத்தில் பிளாஸ்மா (மின்மம்) கூறுகளை வெளியேற்றும்.
  • இந்த வாயுக் கீற்றுக்கள் சூரியக் காற்றின் ஒரு நீண்ட கால மூல ஆதாரமாக இருக்கக் கூடும்.
  • சூரியக் காற்றானது தொடர்ந்து சூரியனை விட்டு வெளியேறுகின்ற பிளாஸ்மா எனப் படும் மின்னூட்டப்பட்ட துகள்களைக் கொண்டுள்ளது.
  • கோள்களுக்கிடையே அமைந்த ஒரு இடைவெளி வழியாக விண்வெளியில் பரவுகின்ற இந்தக் காற்றானது, அதன் பாதையில் உள்ள கோள்களுடன் மோதுகிறது.
  • சூரியக் காற்று பூமியின் காந்தப் புலத்துடன் மோதும் போது துருவ மின்னொளிகளை உருவாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்