TNPSC Thervupettagam

சிறுசேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி வீதங்கள்

April 3 , 2022 840 days 389 0
  • 2022-23 ஆம் நிதியாண்டின் முதலாம் காலாண்டிற்கான (ஏப்ரல்-ஜுன் 2022) சிறு சேமிப்புத் திட்டங்கள் (அ) தபால் நிலைய சேமிப்புத்  திட்டங்கள் மீதான வட்டி வீதங்களை மாற்றாமல் வைத்திருக்க மத்திய நிதி  அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் – ஜுன் மாதங்களுக்கான பல்வேறு திட்டங்கள் மீதான வட்டி வீதங்கள் 4.0% முதல் 7.6% வரை என்ற வரம்பிலேயே உள்ளது.
  • சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி வீதங்களை அரசு காலாண்டு அடிப்படையில் அறிவிக்கிறது.
  • சிறுசேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி வீதங்கள் தொடர்ந்து 8வது காலாண்டாக மாற்றப் படாமல் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்