நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய சேமிப்பு நிறுவனமானது, நாட்டின் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு அதிக அளவில் பங்களித்த மாநிலம் என்று மேற்கு வங்க மாநிலத்தை அறிவித்துள்ளது.
மொத்தத் தொகுப்பு நிதிக்கு இம்மாநிலம் 15% பங்கினை வழங்கியுள்ளது.
இம்மாநிலம் சிறுசேமிப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை, ரூ.90,000 கோடி வரை வசூலித்து உள்ளது.
இதனையடுத்து உத்தரப் பிரதேசம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளது.
உத்தரப் பிரதேசம் ரூ.69.660 கோடி ரூபாயினை வசூலித்துள்ளது.
மகாராஷ்டிரா மூன்றாமிடத்தில் உள்ளது
மகாராஷ்டிரா மாநிலம் ரூ.63.026 கோடி என்ற கணக்கில் 10.57% பங்களித்துள்ளது.
குஜராத் நான்காமிடத்தில் உள்ளது.
குஜராத் மாநிலம் ரூ.48,645 கோடி என்ற கணக்கில் 8.16% பங்கினை அளித்துள்ளது.
ரூ.28,598 கோடி என்ற கணக்கில் 4.8% உடன் தமிழ்நாடு ஐந்தாமிடத்திலுள்ளது.