இந்தியாவில் 2018 ஆம் ஆண்டில் 12,852 ஆக இருந்த சிறுத்தைகளின் எண்ணிக்கையானது 13,874 ஆக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய இந்தியா மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் அதிக எண்ணிக்கையில் சிறுத்தைகள் (8,820) காணப்படுகின்ற நிலையில், அதைத் தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைகள் (3,596) மற்றும் சிவாலிக் மலைகள் மற்றும் கங்கைச் சமவெளிகள் (1,109) ஆகியப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சிறுத்தைகள் காணப்படுகின்றன.
மாநிலம் வாரியாக பார்க்கையில், மத்தியப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையில் (3,907) சிறுத்தைகள் உள்ளன.
அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (1,985), கர்நாடகா (1,879) மற்றும் தமிழ்நாடு (1,070) ஆகிய மாநிலங்களில் உள்ளன.
ஒடிசாவில் 2018 ஆம் ஆண்டில் 760 ஆக இருந்த சிறுத்தைகளின் எண்ணிக்கையானது 2022 ஆம் ஆண்டில் 562 ஆகவும், உத்தரகாண்டில் 2018 ஆம் ஆண்டில் 839 ஆக இருந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 652 ஆகவும் குறைந்துள்ளது.
கேரளா, தெலுங்கானா, சத்தீஸ்கர், பீகார் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களிலும் சிறுத்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.