இது இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் சமீபத்தில் வெளியிடப் பட்டது.
இந்தியாவில் தற்போது 12,852 சிறுத்தைகள் உள்ளன.
நாடு முழுவதும் சிறுத்தைகள் எண்ணிக்கையில் 60 சதவீதம் உயர்வு காணப்பட்டு உள்ளது.
2014 ஆம் ஆண்டில் இந்தியா 7910 சிறுத்தைகளைக் கொண்டு இருந்தது.
மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் முறையே 3,421, 1,783 மற்றும் 1,690 என சிறுத்தைகளின் அளவில் அதிக எண்ணிக்கைகளைப் பதிவு செய்து உள்ளன.
ஐ.யூ.சி.என் சிவப்பு பட்டியலில் சிறுத்தைகள் “பாதிக்கப்படக் கூடியவை” (Vulnerable) என்று பட்டியலிடப் பட்டுள்ளன.