TNPSC Thervupettagam

சிறுத்தைகள், இணை இரையுண்ணிகள் மற்றும் பெரிய தாவர உண்ணிகளின் நிலை – 2018

August 5 , 2021 1082 days 473 0
  • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமானது 2018 ஆம் ஆண்டு சிறுத்தைகள், இணை இரையுண்ணிகள் மற்றும் பெரிய தாவர உண்ணிகள் நிலை (Union Environment Ministry has released a new report titled- Status of Leopards, Co-predators and Megaherbivores-2018) என்று தலைப்பிடப்பட்ட புதிய அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது 2021 ஆம் ஆண்டு உலகப் புலிகள் தினமான ஜூலை 29 அன்று வெளியிடப் பட்டது.
  • இந்த அறிக்கையின்படி,
    • இந்தியாவிலுள்ள சிறுத்தைகளின் அதிகாரப்பூர்வமான எண்ணிக்கையானது 2014-18 காலகட்டத்திலிருந்து 63% ஆக உயர்ந்துள்ளது.
    • அதிக எண்ணிக்கையிலான சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்தில் இருப்பதாக கணக்கிடப் பட்டுள்ளன, அதையடுத்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உள்ளன.

சிறுத்தை பற்றிய தகவல்கள்

  • அறிவியல் பெயர் – பாந்தெரா பார்டஸ்
  • இது 1972 ஆம் ஆண்டு இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் முதல் அட்டவணையில் இடம் பெற்றுள்ளது.
  • இது CITES அமைப்பின் I பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • இது IUCN சிவப்புப் பட்டியலில் பாதிக்கப்படக்கூடிய இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
  • தற்போது சிறுத்தைகளின் 9 துணை இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • அவை ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா ஆகியப் பகுதிகளில் பரவிக் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்