2020 ஆம் ஆண்டு ஜனவரி 28 அன்று இந்திய உச்ச நீதிமன்றமானது சிறுத்தை மீள் அறிமுகத் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையமானது இதனை மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ - பால்பூர் வனவிலங்குச் சரணாலயத்தில் மீள் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
இந்தியாவில் அழிந்து போன ஒரே ஒரு முக்கிய இனம் சிறுத்தை மட்டுமே ஆகும்.
IUCNன் (இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் - International Union for Conservation of Nature) சிவப்புப் பட்டியலானது “சிறுத்தையை” “பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய இனம்” என்று வகைப்படுத்தியுள்ளது.
வேட்டையாடுதலின் காரணமாக சிறுத்தை இனம் இந்தியாவில் அழிந்துவிட்டது.
இந்தியாவின் கடைசி சிறுத்தை 1947 ஆம் ஆண்டில் சத்தீஸ்கரில் கொல்லப் பட்டது.