TNPSC Thervupettagam

சிறுபான்மையினர் உரிமைகள் நாள் - டிசம்பர் 18

December 25 , 2020 1344 days 436 0
  • இந்தியாவில் இந்த தினம் முதன்முதலில் 2013 ஆம் ஆண்டு  டிசம்பர் 18 அன்று அனுசரிக்கப் பட்டது.
  • 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று, ஐக்கிய நாடுகள் சபையானது மதம் அல்லது மொழி, தேசியம் அல்லது இனம் சார்ந்த சிறுபான்மையினருக்குச் சொந்தமான தனிநபர்களின் உரிமைகள் குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டது.
  • நாட்டில் உள்ள மத ரீதியிலான  சிறுபான்மையினருக்காக அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாக்க இது அனுசரிக்கப் படுகிறது.
  • இந்தியாவில் ஆறு மதச் சமூகங்கள் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • இதில் இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் மற்றும் ஜோராஸ்ட்ரியர்கள் அல்லது பார்சிகள் மற்றும் சமணர்கள் (2014) அடங்குவர்.
  • ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் லட்சத்தீவு ஆகியவை மட்டுமே எந்தவொரு சிறுபான்மையினரும் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்கள் ஆகும்.
  • இந்தியாவில் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையமானது 1992 ஆண்டின் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையச் சட்டத்தின் கீழ் நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்