சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள்
October 8 , 2022
779 days
382
- முதியோர்களுக்கான சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை 20 அடிப்படைப் புள்ளிகள் அல்லது 7.4 சதவீதத்திலிருந்து 7.6% ஆக அரசாங்கம் உயர்த்தியது.
- மாதாந்திர வருமானக் கணக்குத் திட்டத்திற்கு 10 அடிப்படைப் புள்ளிகள் அல்லது 6.6 சதவீதத்திலிருந்து 6.7 % ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- சேமிப்பு வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 4 சதவீதமாக தொடர்ந்து வழங்கப் படும்.
- மேலும், பின்வரும் மூன்று திட்டங்களுக்கும் விகிதங்கள் மாற்றப்படாமல் உள்ளன.
- பொது வருங்கால வைப்பு நிதிக்கு 7.1 சதவீதம் வழங்கப்படுகிறது.
- தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்திற்கு 6.8 சதவீதம் வழங்கப்படுகிறது.
- பெண் குழந்தைக்கான சேமிப்புத் திட்டமான சுகன்யா சம்ரிதி யோஜனாவிற்கான வட்டி விகிதங்கள் 7.6 சதவீதம் ஆகும்.
Post Views:
382