இந்திய ரிசர்வ் வங்கியானது சிறுநிதி கடன்களுக்கான ஒழுங்குமுறைக் கட்டமைப்பை அறிவித்தது.
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கி சாரா நிதி நிறுவனங்களான சிறு நிதி நிறுவனங்கள் வழங்கும் சிறு நிதிக் கடன்களின் மதிப்பு நிர்ணயம் செய்வதற்கான வரம்புகளை நீக்கி உள்ளது.
முன்னதாக, சிறு நிதிக் கடன் நிறுவனங்கள் வசூலிக்கும் வட்டி விகிதத்தில் வரம்பு இருந்தது.
அதிகபட்ச வட்டி விகிதமானது, நிறுவனத்தால் ஏற்படும் நிதிச் செலவை விட 10-12% அதிகமாகும் அல்லது முதல் ஐந்து பெரிய வணிக வங்கிகளின் சராசரி அடிப்படை விகிதத்தை விட 2.75 மடங்கு (இவற்றுள் எது குறைவோ) ஆகும்.
இப்போது, இந்த வரம்புகளை அகற்றுவது வங்கி சாரா நிதி நிறுவனங்களான சிறு நிதி நிறுவனங்களை, வங்கிகள் போன்ற மற்ற கடன் வழங்கும் நிறுவனங்களின் நிலைக்கு கொண்டு வருகிறது.
மேலும், நுண்கடன் பெறத் தகுதியுடையக் குடும்ப ஆண்டு வருமானம் ₹3 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.