சிறு நிதியியல் வங்கிகளின் உரிமத்திற்கான வழிகாட்டுதல்கள்
December 12 , 2019 1813 days 628 0
சிறு நிதியியல் வங்கிகளின் (Small Finance Banks - SFBs) “ஆன் டேப்” உரிமத்திற்கான இறுதி வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டில் SFBsக்காக பத்து விண்ணப்பதாரர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தனது கொள்கை ரீதியான ஒப்புதலை அளித்துள்ளது.
"ஆன் - டேப்" வசதி என்பது இந்திய ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொண்டு ஆண்டு முழுவதும் அந்த வங்கிகளுக்கான உரிமங்களை வழங்குதலாகும்.
வழிகாட்டுதல்கள்
மூலதனத் தேவை: குறைந்த பட்ச ஊதியம் பெறும் வாக்களிப்புப் பங்கு மூலதனம்/ நிகர மதிப்புத் தேவை ₹ 200 கோடி ஆகும்.
SFBகளுக்கு திட்டமிடப்பட்ட வங்கிகளின் அங்கீகாரம்: SFBகளின் செயல்பாடுகள் தொடங்கிய உடனேயே அவற்றிற்குத் திட்டமிடப்பட்ட வங்கிகளுக்கான அங்கீகாரம் வழங்கப் படும்.
பணவழங்கீட்டு வங்கிகள் SFBகளுக்கு மாற்றுதல்: பணவழங்கீட்டு வங்கிகள் 5 ஆண்டுச் செயல்பாடுகளுக்குப் பிறகு SFB ஆக மாறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.