இந்திய ரிசர்வ் வங்கி சில்லறை வணிகர்களுக்காக ஒரு அந்தியச் செலாவணி வர்த்தகத் தளம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோர் இதன் மூலம் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தத் தளம் இந்திய தீர்வு வழங்கு நிறுவனத்தினால் மேம்படுத்தப்படுகின்றது.
வர்த்தகம் செய்யப்படக்கூடிய குறைந்தபட்சத் தொகை 1000 டாலர்கள். இவை 500 டாலர்கள் என்ற மடங்கு விகிதத்தில் வழங்கப்படுகின்றன.