சிறு விவசாயிகள் வேளாண்-வர்த்தக கூட்டமைப்பின் (SFAC - Small Farmers Agri-Business Consortium) நிர்வாகிகள் குழுவின் 22-வது சந்திப்பு புதுதில்லியில் நடைபெற்றது. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஸ்ரீராதா மோகன் சிங் இதற்கு தலைமை தாங்கினார்.
SFAC ஆனது மத்திய வேளாண் அமைச்சகத்தின் வேளாண்மை மற்றும் ஒத்துழைப்பு துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சியுடைய சங்கமாகும்.
இது இந்திய சங்கங்கள் பதிவுச் சட்டம் 1860-ன் (Societies Registration Act - 1860) கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் இது இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் வங்கியல்லாத நிதிநிறுவனமாக (NBFC - Non Banking Financial Constitute) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது e-NAM (elctronic - National Agricultural Market) எனும் தேசிய வேளாண்மையின் வர்த்தக சந்தை திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பாகும்.
உழவர்களுக்கு அவர்களின் உற்பத்திப் பொருட்களின் அதிகபட்ச விலை நிலையை கண்டறிய உதவுவதோடு, வேளாண் பொருட்களுக்கு நாட்டிலுள்ள அனைத்து சந்தைகளையும் ஒருங்கிணைத்து ஒற்றை தேசிய சந்தையை ஏற்படுத்தி தருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
செயல் மூலதனங்களின் இருப்பையும், வர்த்தக செயல்பாடுகளையும் விவசாய வேளாண் உற்பத்தி நிறுவனங்கள் அதிகரிக்க உத்திரவாத கடன் திட்டத்தை (Credit Guarantee Fund Scheme) SFAC செயல்படுத்துகிறது.
சந்தை இணைப்புகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் தயாரிப்புகள் போன்றவற்றிற்கு நிறுவன மூலதன உதவி திட்டம் (Venture Capital Assistance Scheme) மூலம் சிறு வேளாண் வர்த்தக நிறுவனங்களின் வளர்ச்சியை இது ஊக்குவிக்கின்றது.