சிறைக் கைதிகளை பரிமாற்றிக் கொள்ளும் ஒப்பந்தம் இந்தியா–சோமாலியா இடையே கையெழுத்தானது
August 2 , 2017 2718 days 1039 0
இந்தியா – சோமாலியா ஆகிய இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பின் போது தண்டனைப் பெற்ற சிறைக்கைதிகளை இரு நாடுகளுக்கிடையே பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது
மேலும், இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் கடற்பாதுகாப்பு, கடற்கொள்ளை மற்றும் வளைகுடாப் பிராந்திய மேம்பாடு போன்றவற்றைப் பற்றி விவாதித்துக் கொண்டனர்.
2008 முதல் இந்தியக் கடற்படை ஏதென் வளைகுடா பகுதியில் கடற்கொள்ளைக்கு எதிரான ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சோமாலியக் கடற்பகுதி கொள்ளைக்கான ஐநாவின் தொடர்பு குழுவில் இந்தியா உறுப்பினராக உள்ளது.