TNPSC Thervupettagam

சிலம் (SILAM) மற்றும் என்பியூசர் (ENFUSER) மாதிரிகள் – காற்றின் தரம் கண்காணிப்பு

October 21 , 2020 1501 days 571 0
  • இந்திய வானிலை ஆய்வு (IMD - Indian Meteorological Department) மையமானது மேம்படுத்தப்பட்ட காற்றுத் தரக் கண்காணிப்பு மாதிரிகளைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.
  • அவை SILAM மற்றும் ENFUSER என்ற வகையிலான மாதிரிகளாகும்.
  • தில்லியில் 40ற்கும் மேற்பட்ட அளவில் காற்றுத் தரக் கண்காணிப்பு அமைப்புகள் உள்ளன.
  • SILAM என்பது வளிமண்டல உள்ளடக்கத்தின் ஒருங்கிணைந்த மாதிரிக்கான ஒரு அமைப்பு என்பதைக் குறிக்கின்றது.
  • இந்த மாதிரியானது 10 கிலோ மீட்டர் தெளிவுத் திறனில் கனிம நுண்ணிய மனிதனால் உருவாக்கப் பட்ட நுண்மத் துகள்களுக்கான CAME-GLOB மற்றும் EDGAR போன்ற உலகளாவிய உமிழ்வு கண்டுபிடிப்புச் செயல்பாடுகளின் மூலம் மேம்படுத்தப் பட்டு உள்ளது.
  • ENFUSER (ENvironmental information FUsion SERvice) என்பது சுற்றுச்சூழல் தகவல் இணைப்புச் சேவை என்பதைக் குறிக்கின்றது.
  • இது தேசியத் தலைநகரப் பகுதியில் மாசுபாட்டுப் பகுதிகளை அடையாளம் காண செயல்படுத்தப் படுகின்றது.
  • SILAM மற்றும் ENFUSER ஆகிய இரண்டும் பின்லாந்துடன் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்பக் கூட்டிணைவின் மூலம் மேம்படுத்தப் பட்டுள்ளது.
  • WRF-Chem என்பது IMDயினால் மேம்படுத்தப்பட்ட மற்றொரு காற்றுத் தர மாதிரி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்