TNPSC Thervupettagam

சிலிக்கான் வேலி வங்கியின் வீழ்ச்சி

March 18 , 2023 491 days 238 0
  • அமெரிக்காவின் கலிபோர்னியா வங்கி கட்டுப்பாட்டாளர்களால் சிலிக்கான் வேலி வங்கி மூடப்பட்டது.
  • 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகு, ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வங்கி வீழ்ச்சி இதுவாகும்.
  • அமெரிக்க வங்கிக் கட்டுப்பாட்டாளர்கள், சிலிக்கான் வேலி வங்கியை (SVB) மூடிவிட்டு, அதன் வைப்புத் தொகையினைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
  • சிலிகான் வேலி வங்கியானது, சில பெரிய தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் புகழ்பெற்றது.
  • சிலிக்கான் வேலி வங்கியானது, தனது பெரும்பாலான சொத்துக்களை அமெரிக்க அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்திருந்தது.
  • பணவீக்க விகிதங்களைக் குறைப்பதற்காக, கடந்த ஆண்டு ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தத் தொடங்கியதால் அதன் விளைவாக அப்பத்திரங்களின் மதிப்புகள் குறைந்தன.
  • இதனால் கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர்களை அந்த வங்கி இழந்தது.
  • இந்த வங்கி மூடப்பட்ட பிறகு, கிட்டத்தட்ட 175 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்த வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகை தற்போது கூட்டாண்மை வைப்புத் தொகை காப்பீட்டுக் கழகத்தின் (FDIC) கட்டுப்பாட்டில் உள்ளது.
  • கூட்டாண்மை வைப்புத்தொகை காப்பீட்டுக் கழகமானது, தேசிய சாண்டா கிளாரா வங்கி என்ற புதிய வங்கியை உருவாக்கியுள்ளது.
  • து தற்போது சிலிக்கான் வேலி வங்கியின் அனைத்துச் சொத்துக்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்