TNPSC Thervupettagam

சிலிக்கா ஏரியில் டால்பின்கள் (ஓங்கில்)

April 14 , 2021 1196 days 767 0
  • டால்பின் கணக்கெடுப்பு குறித்த இறுதித் தரவுகளை ஒடிசா அரசானது வெளியிட்டு உள்ளது.
  • சிலிக்காவில் டால்பின்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரு மடங்காக அதிகரித்துள்ளது.
  • சிலிக்கா ஏரியில் இந்த ஆண்டு 188 டால்பின்களை வன அதிகாரிகள் கண்டுள்ளனர், இது 2020 ஆம் ஆண்டில் 163 ஆக இருந்தது.
  • இந்தக் கணக்கெடுப்பின் போது மூன்று வகை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • ஐராவதி, பாட்டில்-மூக்கு மற்றும் ஹம்பேக் டால்பின்கள் இந்த ஆண்டு காணப்பட்டன.
  • 2021 ஆம் ஆண்டின் டால்பின் கணக்கெடுப்பு அறிக்கையில் கஹிர்மாதா ஆனது டால்பின்களின் மிகப்பெரிய வசிப்பிடம் என்றும் தெரிய வந்துள்ளது.
  • அருகிவரும் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளைப் பாதுகாக்க 1997 ஆம் ஆண்டில் கஹிர்மாதா ஒரு கடல் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
  • கஹிர்மாதா கடற்கரையானது உலகிலேயே அதிகளவில் கடல் ஆமைகள் முட்டையிடும்  இடமாகும்.
  • சிலிக்கா ஏரியானது இந்தியாவின் மிகப்பெரிய உவர் நீர் ஏரியாகும்.
  • டால்பின்கள் இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972 என்ற சட்டத்தின் அட்டவணை I, அருகி வரும் உயிரினங்களுக்கான சர்வதேச வர்த்தகத்திற்கான ஒப்பந்தத்தின் பின் இணைப்பு I, இடம்பெயர் உயிரினங்கள் தொடர்பான ஒப்பந்தத்தின் பின் இணைப்பு II, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்புப் பட்டியல்  (அருகி வரும் இனம்) ஆகியவற்றில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்