TNPSC Thervupettagam

சிலிக்கா ஏரி வளர்ச்சி ஆணையம்

January 9 , 2020 1785 days 977 0
  • 2020 ஆம் ஆண்டில் 1 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த பறவைகள் சிலிக்கா ஏரிக்குத் திரண்டு வரும் என்று எதிர்பார்ப்பதாக சிலிக்கா வளர்ச்சி ஆணையம் அறிவித்துள்ளது.
  • சிலிக்கா ஏரி ஆனது ஆசியாவின் மிகப்பெரிய உப்பு நீர் ஏரி மற்றும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய உப்பங்கழி ஆகும்.
  • இந்த ஏரியானது இந்தியத் துணைக் கண்டத்தில் குடியேறிய பறவைகளுக்கான மிகப்பெரிய குளிர்கால வாழிடமாகவும் விளங்குகின்றது.
  • 1981 ஆம் ஆண்டில் ராம்சார் ஒப்பந்தத்தின் கீழ் சிலிக்கா ஏரியானது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • 1991 ஆம் ஆண்டில் ஒடிசா அரசாங்கத்தின் வன மற்றும் சுற்றுச்சூழல் துறையின் கீழ் சிலிக்கா வளர்ச்சி ஆணையம் உருவாக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்