TNPSC Thervupettagam

சிலிக்கா ஏரி

April 3 , 2021 1332 days 1318 0
  • ஒடிசாவிலுள்ள சிலிக்கா ஏரி ஒரு காலத்தில் வங்காள விரிகுடாவின் ஒரு அங்கமாக இருந்தது.
  • இது  கோவாவிலுள்ள தேசியக் கடலியல் நிறுவனத்தின் கடல்சார் தொல்லியல்  துறை மேற்கொண்ட ஒரு ஆய்வின் படி கூறப்படுகிறது.

குறிப்பு

  • சிலிக்கா ஏரி ஆசியாவின் மிகப்பெரிய ஒரு உவர்நீர் ஏரியாகும்.
  • சிலிக்கா ஏரி ஒடிசாவின் பூரி, கர்தா மற்றும் கஞ்சம் ஆகிய மாவட்டங்களில் பரந்து விரிந்திருக்கும் ஓர் உவர்நீர் காயல் ஆகும்.
  • இது வங்காள விரிகுடாவில் கலக்கும் தயா ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் அமைந்து உள்ளது.
  • இந்தியாவின் மிகப்பெரிய காயல் இதுவாகும்.
  • மேலும் நியூ கேலடோனியாவிலுள்ள புதிய கேலடோனியன் பவளப்பாறைத் திட்டுகளை அடுத்து உலகின் மிகப்பெரிய காயலும் இதுவேயாகும்.
  • இது ராம்சார் தளங்களின் பட்டியலிலும் யுனெஸ்கோவின் தற்காலிக உலகப் பாரம்பரியத் தளங்களின் பட்டியலிலும் சேர்க்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்