TNPSC Thervupettagam

சில்க்யாரா வளைவு - பர்கோட் சுரங்கப்பாதை

February 26 , 2018 2317 days 750 0
  • உத்தரகாண்ட் மாநிலத்தில் சில்க்யாரா வளைவு மற்றும் பர்கோட்டிற்கு இடையே 4.531 கி.மீ. தொலைவிற்கு இருவழி இருதிசை சுரங்கப்பாதையை (2-Lane Bi-Directional Tunnel) அமைப்பதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Economic Affairs -CCEA) ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான முறைமையின் (Engineering, Procurement, Construction - EPC) கீழ்  இந்த சுரங்கப் பாதையானது உத்தரகாண்ட் மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலை NH-139-யுடன் வழியையொட்டி அமையுமாறு கட்டப்பட உள்ளது.
  • சார்தம் மஹாமார்க் பரியோஜனா (Char dham Mahamarg Pariyojana’) திட்டத்தின் ஒரு பகுதியாக அமைய உள்ள இத்திட்டமானது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் நிதி அளிக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தால் (National Highway Infrastructure Development Corporation Ltd - NHIDCL) செயல்படுத்தப்பட உள்ளது.
  • கட்டமைக்கப்படும் இச்சுரங்கப்பாதையானது ,
    • நான்கு சார்தம் மையங்களுள் ஒன்றான யமுனோத்ரிக்கு அனைத்துகால பயண வழிப்பாதை இணைப்பை (all weather connectivity) ஏற்படுத்தி தரும்.
    • தராசு மற்றும் யமுனோத்ரிக்கு இடையேயான பயண தூரத்தைக் குறைக்கும்.
  • இமாலயப் பகுதியில், சார்தம் புனிதத் தல மையங்கள் என்றழைக்கப்படும் கங்கோத்திரி, யமுனோத்ரி, கேதர்நாத், பத்ரிநாத் ஆகியவற்றிற்கிடையேயான வழித் தொடர்பை அதிகரித்து, அவ்வழியிலான பயணத்தை பாதுகாப்பானதாக, மிகவும் உகந்ததாக, விரைவானதாக மாற்ற ஏற்படுத்தப்பட்ட திட்டமே சார்தம் மஹாமார்க் விகாஸ் பரியோஜனா ஆகும்.
  • இந்தியாவின் எல்லை மாநிலங்களில் சர்வதேச எல்லைகளை ஒட்டி அதனருகே அமைந்துள்ள நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்காக 2014 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட முழுவதும்  அரசால் உரிமை கொள்ளப்படும் (fully state owned) ஒரு கட்டமைப்பு நிறுவனமே NHIDCL  ஆகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்