TNPSC Thervupettagam

சில்லுகளில் மனித உறுப்பு செயல்பாட்டு தொழில்நுட்பம்

September 23 , 2024 65 days 131 0
  • உயிரித் தொழில்நுட்பத் துறையில் புதுமைகளை உருவாக்குவதற்காக என்று இந்திய அரசானது ‘BioE3’ கொள்கையை அறிவித்துள்ளது.
  • இதற்காக அது உயிரி உற்பத்தி மையங்கள், உயிரி செயற்கை நுண்ணறிவு மையங்கள் மற்றும் உயிரி சார் நிறுவனங்களை நிறுவியுள்ளது.
  • மரபணு சார்ந்த சிகிச்சை மற்றும் உயிரணு சார்ந்த சிகிச்சை போன்ற உயிரியல் சார் நுட்பத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதையும் இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலகளாவிய சில்லுகளின் மூலம் மனித உறுப்பு செயல்பாட்டு சந்தையானது 2032 ஆம் ஆண்டில் சுமார் 1.4 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • சில்லுகளின் மூலம் மனித உறுப்பு செயல்பாட்டு நுட்பம் என்பது ஒரு கட்டுப்படுத்தப் பட்ட நுண்ணிய சூழலில் சில மனித உறுப்புகளின் இயக்க செயல்பாடுகளை மீண்டும் உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய சாதனமாகும்.
  • ஒரு மருந்தின் பெரும் தாக்கங்களைச் சோதிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் தற்போது பயன்படுத்தும் உயிரணு வளர்ப்பு மாதிரிகள் மற்றும் விலங்கு மாதிரிகளை விட அவை சிறந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்திய அரசானது சில்லுகளின் மூலம் மனித உறுப்புச் செயல்பாட்டு நுட்பத்தினைப் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் 2019 ஆம் ஆண்டு புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் விதிகளைத் திருத்தியமைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்