TNPSC Thervupettagam

சில்லேறு நதியில் பெளி மீன் (Mahseer Fish)

September 1 , 2020 1551 days 794 0
  • சமீபத்தில் பெளி மீன்எனப்படும் ஓர் அரிய வகை மீன் இனமானது சில்லேறு நதியில் காணப்பட்டுள்ளது.
  • இந்த மீன் இனமானது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் (IUCN - International Union for Conservation of Nature) சிவப்பு நிறப் பட்டியலில் அருகி வரும் இனமாகப் பட்டியலிடப் பட்டுள்ளது.
  • பெளி மீன் ஆனது குளிர் பிராந்தியப் பகுதிகளில் பாயும் இமயமலை நதிகளில் காணப் படுகின்றது.
  • இது இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், பூடான், நேபாளம் ஆகியவற்றில் காணப் படுகின்றது.
  • இது ஒரு மிகப்பெரிய நன்னீர் வகை மீனாகும்.
  • உலகில் 47 வகை பெளி மீன் இனங்கள் உள்ளன.
  • இதில் 15 இனங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.
  • சமீபத்தில் 2019 ஆம் ஆண்டில், IUCN ஆனது கூன்முதுகு பெளி மீனின் நிலையை மிகவும் அருகி வரும் இனமாகப் பட்டியலிட்டுள்ளது.
  • இது இந்தியாவில் காவிரி நதியில் மட்டும் காணப்படுகின்றது. இது உலகில் வேறு எங்கும் காணப்படுவதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்