சமீபத்தில் “பெளி மீன்” எனப்படும் ஓர் அரிய வகை மீன் இனமானது சில்லேறு நதியில் காணப்பட்டுள்ளது.
இந்த மீன் இனமானது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றத்தின் (IUCN - International Union for Conservation of Nature) சிவப்பு நிறப் பட்டியலில் அருகி வரும் இனமாகப் பட்டியலிடப் பட்டுள்ளது.
பெளி மீன் ஆனது குளிர் பிராந்தியப் பகுதிகளில் பாயும் இமயமலை நதிகளில் காணப் படுகின்றது.
இது இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், பூடான், நேபாளம் ஆகியவற்றில் காணப் படுகின்றது.
இது ஒரு மிகப்பெரிய நன்னீர் வகை மீனாகும்.
உலகில் 47 வகை பெளி மீன் இனங்கள் உள்ளன.
இதில் 15 இனங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.
சமீபத்தில் 2019 ஆம் ஆண்டில், IUCN ஆனது கூன்முதுகு பெளி மீனின் நிலையை மிகவும் அருகி வரும் இனமாகப் பட்டியலிட்டுள்ளது.
இது இந்தியாவில் காவிரி நதியில் மட்டும் காணப்படுகின்றது. இது உலகில் வேறு எங்கும் காணப்படுவதில்லை.