சில சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகித உயர்வு
July 23 , 2023 490 days 273 0
ஜூலை-செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 0.3% வரை அரசாங்கம் உயர்த்தி உள்ளது.
ஐந்தாண்டு காலத் தொடர் வைப்புத் தொகைக்கு (RD) அதிகபட்சமாக 0.3% உயர்த்தப் பட்டுள்ளது.
தபால் நிலையங்களில் வைக்கப்பட்டு வரும் ஒரு வருட கால வைப்புத் தொகைகளுக்கு தற்போது அதிகபட்சமாக 0.1 சதவிகிதம் உயர்த்தப்பட்டு 6.9% வட்டியும் மற்றும் இரண்டு வருட கால வைப்புத் தொகைகளுக்கு 7% (6.9% சதவீதத்திலிருந்து) வட்டியும் வழங்கப் படும்.
மூன்று வருட மற்றும் ஐந்து வருட நிரந்தர நிதி வைப்புத் தொகைகளுக்கு முறையே 7% மற்றும் 7% ஆக வழங்கப்பட்டு வரும் வட்டி விகிதங்கள் மாற்றப்படாமல் உள்ளன.
பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் சேமிப்புக் கணக்கு வைப்புத் தொகைகளுக்கு முறையே 7.1% மற்றும் 4% ஆக வழங்கப் பட்டு வரும் வட்டி விகிதங்கள் மாற்றப்படாமல் உள்ளன.