சீன அறிவியல் நிறுவனமானது சிவப்புப் பாண்டா இனங்கள் அவற்றின் மரபணு ஆய்வின் அடிப்படையில் இரண்டு தனித்தனி இனங்கள் என்று கண்டுபிடித்துள்ளது.
டிஎன்ஏ பகுப்பாய்வில் மூன்று மரபணு குறிப்பான்களில் சீன சிவப்புப் பாண்டாக்கள் மற்றும் இமயமலை சிவப்புப் பாண்டாக்கள் ஆகிய இரண்டு இனங்களுக்கு இடையில் வேறுபாட்டை இவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த அங்கீகாரமானது ஆபத்து நிலையில் உள்ள பாலூட்டிகளின் பாதுகாப்பிற்காக நமக்கு உதவ இருக்கின்றது.