TNPSC Thervupettagam

சிவிங்கிப் புலிகள் மறு அறிமுகம்

September 18 , 2022 672 days 495 0
  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் அறிமுகம் செய்வதற்காக முதல் கட்ட அளவில் சிவிங்கிப் புலிகள் நமீபியாவில் இருந்து தற்போது கொண்டு வரப் படுகிறது.
  • செப்டம்பர் 17 ஆம் தேதியன்று பிரதமரால் தேசியப் பூங்காவில் 8 சிவிங்கிப் புலிகள் விடப் பட்டன.
  • ஆப்பிரிக்கச் சிவிங்கிப் புலிகள் ஆசிய சிவிங்கிப் புலிகளை விட சற்று பெரியவை ஆகும்.
  • அவை ஆப்பிரிக்கா முழுவதும் காணப்படுவதோடு, அவை IUCN அமைப்பின் சிவப்பு நிறப் பட்டியலில் பாதிக்கப் படக்கூடிய இனங்களாக பட்டியலிடப் பட்டுள்ளன.
  • 1952 ஆம் ஆண்டில் இந்தியாவில் அழிந்து போனதாக அறிவிக்கப்பட்ட சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
  • தற்போது, உலகிலேயே ஆசிய சிவிங்கிப் புலிகள் வாழும் ஒரே நாடு ​​ஈரான் மட்டுமே ஆகும்.
  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்கா 1981 ஆம் ஆண்டில் ஒரு வன விலங்குச் சரணாலயமாக நிறுவப்பட்டு பின்னர் 2018 ஆம் ஆண்டில் இதற்கு தேசியப் பூங்கா என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.
  • சம்பல் ஆற்றின் முக்கிய கிளை நதிகளில் ஒன்றான குனோ நதியின் பெயரால் இதற்கு இப்பெயரிடப்பட்டது.
  • இந்த நதி அந்தத் தேசியப் பூங்காவை இரண்டாகப் பிரித்து அதன் முழு நீளப் பகுதிகளில் பாய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்